Wednesday, October 24, 2012

Sollamalle Yar parthathu

 படம் : பூவே உனக்காக

பாடல்: சொல்லாமலே யார் பார்த்தது




சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடு தான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது  காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

சொல்லாமலே யார் பார்த்தது

மல்லிகை பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சு மெத்தை  முள்ளை  போலே குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துகின்றது
அந்த சத்தம்  கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது

கண்ணே உந்தன் முந்தானைகள் காதல் மழையா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உந்தன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொண்  வீணை எந்தன் இடையா

இதயம் நழுவதடி
உயரும் கரையுதடி
உன்னோடுதான்

வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்கள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி

சொல்லாமலே யார் பார்த்தது

ப ப ப ச ச  நீ ம
ப ப ப ச ச  நீ ம

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிகொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிகொண்டது

என்னை விற்று  தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை  சொன்னபோது அள்ளிகொண்டது

அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து
உலக அதிசியத்தில் ஒன்று கூடியது
நம் காதல்தான்

நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றி கொள் கண்மணி


சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடு தான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது  காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா







No comments:

Post a Comment