படம் : முந்தானை முடிச்சு
பாடல் : சின்ன சிறு கிளியே
ஆரீ ராரி ரோ ஆரீ ராரி ரோ ஆரீ ராரி ரோ
ஆரீ ராரி ரோ ஆரீ ராரி ரோ ஆரீ ராரி ரோ
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
அன்னை மனம் ஏங்கும்
தந்தை மனம் தூங்கும்
நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா
சின்ன சிறு கிளியே
சுகமே நினைத்து சுயவரம் தேடி
சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ
கண் கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேசமோ
வாழ்தது போதுமடா வாழ்க்கை இனியேன்
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா
வேடிக்கை தானடா
சின்ன சிறு கிளியே
மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
எனை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவரோ
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்
நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
No comments:
Post a Comment